மோடி பதவியேற்பு வைபவத்தில் சனாதிபதி கலந்துகொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் சனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்கு செல்கின்ற இலங்கை
தூதுக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு சனாதிபதி விக்னேஸ்வரனுக்கு அழைப்பு
விடுத்துள்ளார்.
இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் திரு.நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு
வைபவத்தில் கலந்துகொள்வதற்கு செல்கின்ற சனாதிபதியின் தூதுக்குழுவில்
இணைந்துகொள்ளுமாறு வட மாகாண சபையின் முதலமைச்சர் முன்னாள் நீதியரசர்
சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு சனாதிபதி அழைப்புவிடுத ;துள்ளார்.
இவ் வைபவம் எதிர்வரும் திங்கட்கிழமை மே (26) மாலை புது டில்லியில் நடைபெறும். இந்
நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்.
சனாதிபதி கலந்துகொள்வது நேற்று மே (22) ராஜதந்திர அலைவரிசை மூலமும் இன்று
காலை சனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு (@PresRajapaksa) ஊடாகவும்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உங்களுடைய பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்கு
அழைத்தமைக்காக நன்றி தெரிவிக்கிறேன். அவ் வைபவத்தில் கலந்துகொள்வேன் என
குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மாத ஆரம்பத ;தில் மோடி அவர்களின் கட்சி மகத்தான வெற்றியடைந்ததை முன்னிட்டு
அவரை அழைத்து வாழ்த்துத் தெரிவித்த முதலாவது உலக தலைவராக சனாதிபதி
திகழ்கின்றார். இவ்வழைப்புக்கு பதில் அளித்த மோடி அவர்கள் இன்று உங்களோடு
கதைத்ததில் மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகள்
பலமடையுமென எதிர்பார்க்கிறேன் எனக் கூறினார்.
இத்தொலைபேசி கலந்துரையாடலின்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை புதிய
ஆட்சியின் கீழ் மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பதாக சனாதிபதி ராஜபக்ஷ
தெரிவித்தார்.