Ad Widget

பொலிசாரால் ரவிகரன் மீது சோடிக்கப்ப​ட்ட வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு சமுகமளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அவ்வழக்கு சோடிக்கப்பட்டதென இனங்காணப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்று காலை நீதிமன்ற வளாகத்தின் முன் ரவிகரனின் தலைமையில் காணாமல் போனோரை மையப்படுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அது நீதிமன்ற அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடிய செயலாகையால் அதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மேலும் இவ்வாறான தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ரவிகரன் திட்டமிட்டுள்ளதாகவும் பொலிசாரால் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் ரவிகரனிடம் வினவப்பட்ட போது, காணாமல் போனோர் எம்முடைய உறவுகள். அவர்களுக்காக ஆர்ப்பாட்டங்களும் மக்கள் எழுச்சிகளும் நடாத்தப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்ட அவர், இன்று அது தொடர்பில் எதுவித திட்டமும் தான் யாரிடமும் முன்வைக்கவில்லை எனவும் இன்று ஆர்ப்பாட்டம் என் தலைமையில் நடைபெறவிருக்கிறது என்று பொலிசாரால் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டானது எதுவித ஆதாரப் பின்னணிகளுமின்றி சோடிக்கப்பட்டதொன்றே எனவும் சாட்டினார்.

ரவிகரன் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் திரு.பரஞ்சோதி அவர்களும் இவ்வாறான குற்றச்சாட்டுகளில் எதுவித உண்மைத்தன்மையும் இல்லாததால் மேற்படி வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டிய நிலையில் பொலிசாரால் ரவிகரன் மீது போடப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Posts