மே 18 நினைவு தினத்தினை பொது இடத்தில் நினைவு கூர்ந்தால் கைது செய்வோம் என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தார்.
யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அரசாங்கத்தின் உத்தரவிற்கமைய மே 18 நினைவு தினத்தினை பொது இடங்களில் அனுஷ்டிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் உயிரிழந்த தினமாகையினால் அவர்களை நினைவுகூருவார்கள் என்ற ரீதியிலே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
அதேபோல், வடமாகாண சபையிலும் அஞ்சலி செலுத்தவுள்ளதாக அறிந்தோம், ஆனால் அங்கும் அஞ்சலி செலுத்த அனுமதியளிக்கமாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
வடமாகாண சபையில் நினைவேந்தல்! அனைவரையும் அணி திரளுமாறும் அழைப்பு