முழந்தாளிட வைத்த வழக்கு: குற்றவாளிக்கு 2 வருட கடூழிய சிறை

judgement_court_pinaiநவகத்தேகம தேசிய பாடசாலையில் ஒழுக்கத்திற்கு பொறுப்பான துசிதா ஹேரத் என்ற ஆசிரியையை முழந்தாளிட வைத்த வடமேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவிற்கு ஏழுவருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டுவருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை இன்று விதிக்கப்பட்டது.

புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணன்டோவே இவ்வாறு தண்டனை விதித்துள்ளார்.

சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு மூன்று இலட்சம் ரூபா நட்டஈடுசெலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் 50 ஆயிரம் ரூபாவும் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts