இலங்கைக்கு தொடர்ந்து உதவவும் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தவும் புதிய தூதுவர்கள் உறுதி

ஆறு புதிய தூதுவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி செயலகத்தில்
வைத்து நேற்று காலை தமது நியமனக்கடிதங்களைக் கையளித்தனர்.

Six new ambassadors

  1. திரு பீலிக்ஸ் நகோமா – கொங்கோவிற்கான தூதுவர் (வதிவிடம் புதுடில்லி)
  2. திரு ராஉல் இக்னேஷியோ குவாஸ்டாவினோ – ஆஜன்டீனாவுக்கான தூதுவர் (வதிவிடம் புதுடில்லி)
  3. திரு சான் வொன்சாம் – கொரிய குடியரசின் தூதுவர்
  4. திரு விசென்டே டிவென்சியோ டிபென்டில்லோ – பிலிப்பீன்சுக்கான தூதுவர் (வதிவிடம் டாக்கா)
  5. திரு சுஹைர் ஹம்தெல்லா சைத் – பாலஸ்தீனுக்கான தூதுவர்
  6. திரு கிலெர்மோ ரூபியோ பியுன்ஸ் – எல்சல்வடோருக்கான தூதுவர் (வதிவிடம் புதுடில்லி)

இந்த தூதுவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கை மக்களுக்கும்
தங்களது நாட்டுத்தலைவர்களிடமிருந்து நல்லாசிச் செய்திகளைக் கொண்டுவந்திருந்ததோடு, இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த நெருங்கிப்பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டையும் வழங்கினர்.

‘ஜெனீவாவில் ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு
கொங்கோ தொடர்ந்தும் உதவி அளிக்கும்’ என திரு நகோமா ஜனாதிபதியிடம்
தெரிவித்தார்.

தனது சேவைக்காலப்பகுதியில் புதிய கூட்டுறவுத்துறைகளை குறிப்பாக வர்த்தகத்துறையில் கூட்டுறவை விருத்தி செய்வதே தனது நோக்கமாகும் என ஆஜன்தீனாவின் தூதுவர் திரு குவாஸ்டாவினோ தெரிவித்தார்.

இரண்டு நாடுகளுக்கிடையேயும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில்
தம்மிடம் மூன்று விசேட இலக்குகள் இருப்பதாக கொரியாவின் தூதுவர் திரு வொன்சாம் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

  • இருதரப்பு உறவுகளின் அடித்தளங்களை மேலும் உறுதிப்படுத்தல்
  • வர்த்தகத்தையும் முதலீட்டையும் ஊக்குவித்தல்
  • புதிய துறைகளில் உறவுகளை விருத்தி செய்தல் ஆகியனவே அந்த இலக்குகளாகும்.

இலங்கையில் போருக்குப் பின்னரான அபிவிருத்திகள் குறித்து புதிய தூதுவர்களுக்கு
விளக்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் பயணித்து பல்வேறு துறைகளையும் சார்ந்த மக்களுடன் பேசி உண்மையான களநிலவரங்களை அறிந்து தங்களது நாடுகளுக்கு இலங்கை பற்றிய உண்மையான அறிக்கைகளை எடுத்துச்
செல்லுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

பிரதி வெளிவிவகார அமைச்சர் திரு நியோமல் பேரேரா ஜனாதிபதியின் செயலாளர்
திரு.லலித் வீரதுங்க வெளிவிவகார அமைச்சின் செலயலாளர் திருமதி செனுகா
செனவிரத்ன ஆகியோரும் இச்சந்திப்பின்போது பிரசன்னமாகியிருந்தனர்.

Related Posts