ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்படுவதை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.
தமக்கு அதிகாரப் பசி இல்லை என்றும் அவர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம், குறிப்பிட்டுள்ளார். உண்மையில் அரசியலில் நுழைய எனக்கு விருப்பமில்லை. போருக்குப் பிந்திய வடக்கிற்கு நல்லதொரு தலைமைத்துவத்தை வழங்கி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று பலரும் என்னைக் கேட்டுக் கொண்டதால் தான், அரசியலில் இறங்கினேன்.
வடக்கிலுள்ள மக்கள் ஏகோபித்த ஆதரவுடன் என்னை முதலமைச்சராகத் தெரிவு செய்து ஏழு மாதங்களாக அந்தப் பதவியை வகிக்றேன்.ஆனால் துரதிஸ்டவசமாக, ஆக்கபூர்வமான வகையில் என்னால் மக்களுக்கு சேவையாற்ற முடியவில்லை. ஏனென்றால், வடக்கு மாகாணசபைக்கு சரியான முறையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை.தற்போது வடக்கு மாகாணசபைக்குரிய அதிகாரங்களைப் பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறேன்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக நிற்பது குறித்து என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. எந்தவொரு அதிகாரப்பசியுடனும் நான் அரசியலுக்கு வரவில்லை. என்னை வடக்கு மாகாண முதல்வராகத் தெரிவு செய்த மக்களுக்குச் சேவையாற்றுவதே எனது இலக்கு. எனவே என்னை பொதுவேட்பாளராக முன்னிறுத்துவது அர்த்தமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்