Ad Widget

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த அமைதிப் போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

uni-lect

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றியப் பிரதிநிதிகளை எச்சரிக்கை செய்து பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

‘நினைத்தவுடன் பல்கலைக்கழகத்தை மூடுவது தான் மாணவர் மையக் கல்வியா?’, ‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மகத்தான ஆயுதம் பேனா முனையே தவிர துவக்கு முனையல்ல?’, ‘பல்கலைக்கழகம் என்பது கல்விக்கழகமா அல்லது கொலைக்களமா?’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

12

13

Related Posts