மருத்துவ துறைசார்ந்த 354 பட்டதாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி நியமனம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கு தகுதியானவர்களை அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் அவற்றின் பிரதிகளுடன் நாளை வருகைதர வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் வெளிநாட்டில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்கள் மருத்துவ பீடத்தினால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட மருத்துவச் சபையின் சான்றிதழுடன் சமூகமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று காலை 9 மணி முதல் பொரளை மருத்துவ ஆய்வு கூடத்தில் இடம்பெறுகின்றது.