யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் நிர்வாகிகளை கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் மே 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்.வலய முகாமைத்துவ மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்வி நிறுவனங்களது நடைமுறை நேரம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.