தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச பணிமனைகள் இரண்டு யாழில் திறந்துவைக்கப்பட்டுள்ளன. கோப்பாய் பிரதேச பணிமனை இன்று காலை 9 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்- பருத்தித்துறை வீதியல் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள அலுவலகத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளலாரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா திறந்துவைத்தார்.
இந்த நிகழ்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாணசபை உறுப்பினர்கள் ,உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள்,உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
இதேவேளை நேற்றயதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் கரணவாய் மத்தி மூத்த விநாயகர் ஆலயத்திற்கு அருகில் திறந்து வைக்கப்பட்டது.
அலுவலகத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திறந்து வைத்ததுடன், பெயர்ப் பலகையினை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது