யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களினால் நேற்று வெள்ளிக்கிழமை (02) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் பல்கலைக்கழக நிர்வாகத்திரால் வழங்கப்பட்ட உறுதிமொழியினையடுத்து முடிவுக்கு வந்தது.
பல்கலைக்கழக பதில் பிரதம பாதுகாப்பு அதிகாரி மீது கலைப்பீட மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினையடுத்தே இந்த கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன், இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு குறித்த மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதாக பல்கலைக்கழக நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
தொடர்புடைய செய்தி
யாழ்.பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்