யாழ், வண்ணர்பண்ணை ஆறுகால் மடம் பகுதி இளைஞர்களை முச்சக்கரவண்டியிலும் மோட்டார் சைக்கிளிலும் சென்ற இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இனந்தெரியாத நபர்கள் YQ-4134 என்ற இலக்க முச்சக்கரவண்டியிலும் MG-5553 மோட்டார் சைக்கிளிலும் வந்து உங்களுக்கு காலம் நெருங்கிவிட்டது போகப்போரியல் என்று அச்சுறுத்திவிட்டு சென்றுள்ளனர்.
அவ்வாறு வந்தவர்களில் ஒருவர் யாழ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸார் என்று தனிப்பட்ட பகை காரணமாக இவ்வாறு அச்சுருத்தியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேனவிடம் கேட்டபோது-
குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் எவையும் பதிவு செய்யப்படவில்லை என்றும் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டல் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் தமிழ் இளைஞர்களை பொலிஸ்துறையில் இணைத்துக்கொண்டது மக்களுக்கு தமிழில் சிறந்த முறையில் சேவை செய்வதற்கே மாறாக அவர்களுடைய தனிப்பட்ட விரோதங்களை தீர்த்துக்கொள்வதற்கல்ல இனிவரும் காலங்களில் இவர்கள் தொடர்பில் கூடிய கவனம் எடுக்கப்படும்.
இதேவேளை இவ்வாறு அதிகாரத்தை மீறி செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்குமிடத்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.