ஏனைய மக்களைப் போன்று முஸ்லிம் மக்களுக்கும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து தருவதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றத்தில் எதிநோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக நேற்று முன்தினம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் பச்சை வெளி தனியார் காணிப் பிரச்சனை,அரசாங்கத்தால் சுவிகரிக்கப்பட்ட ஷாபிநகர்,காணிக் கச்சேரியின் தேவை,இந்திய வீட்டுத் திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தல், மீள்குடியேற்ற உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
கோரிக்கைகள் தொடர்பாக அரச அதிபருக்கு மாநகர சபை உறுப்பினர்,அஷ்ஷெய்க் பி.ஏ.எஸ். சுப்யான் தெரியப்படுத்தியதை அடுத்து அரச அதிபர் கருத்து தெரிவிக்கையில்
ஏனைய மக்களைப் போன்று முஸ்லிம் மக்களுக்கும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து தருவதுடன் இவர்களது பிரச்சனைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைச்சுக்கு அறிவித்தள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்