பஹரெயின் இராச்சியத்தின் உயர் பதக்கம் சனாதிபதிக்கு வழங்கப்பட்டது

பஹரெயின் இராச்சியம் தனது நாட்டின் உயர் கௌரவ விருதான கலிபா பதக்கத்தை சனாதிபதி
ராஜபக்ஷ அவர்களுக்கு நேற்று (28) வழங்கி கௌரவித்தது.

President Mahinda Rajapaksa

மாண்புமிகு சனாதிபதி அவர்களே, நீங்களும் உங்களுடைய நட்பு நாடும் இருதரப்பு தொடர்புகள்
அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் என்பவற்றை மிக உயர்ந்த நிலையில் வைப்பதற்கு நீங்கள் தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட முயற்சியை பாராட்டும்முகமாக இவ்விருது வழங்கப்படுகின்றது என பஹரெயினின் ஹமாத் பின் இசா அல் – கலிபா மன்னர் சனாதிபதி ராஜபக்ஷ அவர்களுக்கு தெரிவித்தார்.

அல் – கலிபா விருது 1940ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதை அடுத்து 1970 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அது மீண்டும் செயலூக்கப்படுத்தப்பட்டது. காலஞ்சென்ற ஷெக் இசா பின் சல்மான் அல் – கலிபா எமிர் அவர்கள் (Amir Sheikh Isa bin Salman Al-Khalifa) மனிதாபிமானத்தின்பொருட்டு ஆற்றிய அர்ப்பணிப்புள்ள சேவையை பாராட்டுவதற்காக இவ்விருது ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை இவ் விருது சவுதி அரேபிய மன்னர், மலேசிய பிரதம அமைச்சர். இரண்டாவது எலிசபெத் மகாராணி உள்ளிட்ட தலை சிறந்த தலைவர்கள் சிலருக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது.

விருதை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய சனாதிபதி ராஜபக்ஷ நான் கௌரவத்திற்கும் பாராட்டுக்கும் உள்ளாகியுள்ளேன் எனத் தெரிவித்தார். பஹரெயின் இராச்சியத்துடன் மிக விரிவானதும் கௌரவமானதுமான கூட்டுப் பங்காண்மையை கட்டியெழுப்புவதற்கு நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.

உங்களுடைய கருணைமிக்க சொற்கள் தன்னிகர் இல்லாத விருந்தோம்பல் அமோகமான செயற்பாடுகள் நிச்சயமாக செயலூக்கமுள்ள ஒத்துழைப்பாக மாறுகின்ற இந்த உத்தியோகபூர்வ விஜயம் எனக்கும் எனது தூதுக் குழுவுக்கும் என்றும் நினைவில் பதிந்திருக்கும் நினைவுச் சின்னமாக திகழும் என சனாதிபதி குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கைத்தொழில், வாணிப அமைச்சர், ரிசாட்
பதியுதீன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு. நலனோம்புகை அமைச்சர் டிலான் பெரேரா,
தொழில், தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர, மேல் மாகாண சபை உறுப்பினர்,
நௌசர் பௌசி, சனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பஹரெயினுக்கான இலங்கை தூதுவர்
அநுர எம்.ராஜகருணா ஆகியோரும் வியாபார தூதுக் குழுவினரும் இவ்விருது வழங்கும் விழாவில்
கலந்து கொண்டனர்.

Related Posts