எங்களுக்கு உடைந்த நாற்காலிகளை வழங்கி அதில் உட்காருமாறு அரசாங்கம் கேட்கின்றது. நாங்கள் எப்படி உட்காருவது எமக்கான அதிகாரங்கள் போதாது என வடமாகாண முதலமைச்சரும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண சபையில் வைத்தே அவர் நேற்று திங்கட்கிழமை மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
யுத்தக்காலத்தின் போது வடமாகாண சபை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு பதிலாக இராணுவம் அல்லாத ஒருவரை ஆளுநராக நியமிப்பதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் வரை காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி