வடக்கு மாகாண சபை உறுப்பினராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகருமான சின்னத்துரை தவராசா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் உறுப்பினரொருவர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டதன் காரணமாக வடமாகாணத்தின் மாகாண சபையின் உறுப்பாண்மையின் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் பதிலாக 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் படி 65 (1) ஆம் பிரிவின் கீழ் சின்னத்துரை தவராசா அவர்களை நியமித்திருப்பதாக 09.04.2010 இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கிறது.