கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளது. பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் பரீட்சை பெறுபேறுகளை திணைக்களத்துக்கு வருகைதந்து பெற்றுகொள்ளலாம் எனவும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்கும் தனியார் பரீட்சார்த்திகளுக்குமான பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.