முப்பது வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் எமது சமூகத்திலிருந்து விடுபட்டு சென்ற வடக்கு கிழக்கு மக்களின் சமாதான பாலத்தினை மீண்டும் நிறுவி அதன் மூலம் வடக்கு தெற்கு கலைஞர்களை ஒன்றிணைத்து பெரும் சக்தியை உருவாக்குதல் அவசியம் என யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இன்று காலை 10 மணயளவில் இடம்பெற்ற புத்தாண்டு உறவு பயணம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.அதன்போது உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார.
மேலும் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் யாழ் மாவட்ட செயலகம் இணைந்து புத்தாண்டு காலத்தில் ஏற்பாடு செய்த பல செயற்திட்டங்களாக தமிழ் சிங்கள கிராமிய விளையாட்டுக்கள் மற்றும்,சிங்கள மற்றும் தமிழ் இசை நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றை நடாத்தல் என்பன முக்கிய செயற்திட்டங்களாக இடம்பெறவுள்ளது.
எனவே இந்த செயற்திட்டங்களை ஏற்படுத்தி வடக்கில் இளைய சமுதாயத்தை வலுப்பெறச்செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார்.