இலங்கை முழுவதும் மோட்டார் சைக்கிள் சவாரியில் ஈடுபட்டு வருகின்ற மலேசியாவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 9 பேர் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கினை வந்தடைந்தனர்.
யாழ்.பாதுகாப்புப் படைத்தலைமையகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் 52 ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் சூலனி அபயநாயக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களை வரவேற்றார்.
1200 சிசி மற்றும் 1600 சிசி வலு கொண்ட டி-6 ரக மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் இவர்கள் வியாழக்கிழமை (27) காலை 9 மணிக்கு திருகோணமலையில் இருந்து புறப்பட்டு புல்மோட்டை அரச மரத்தடி சந்தி, வவுனியா ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.