இராணுவத்தில் இணைந்து நாட்டிற்கு சேவை செய்ய தமிழர்களுக்கு சந்தர்ப்பம் – உதயப்பெரேரா

கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளை இராணுவத்திற்கு இணைத்தது போன்று எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார்.

udaya-aus

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அங்கிலிகன் திருச்சபையின் அவுஸ்திரேலிய பேராயர் பேராயர் கலாநிதி பிலிப் பிறைரர் அவர்களுக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று முன்தினம் பலாலியில் இடம்பெற்றது.

அதன்போதே கட்டளைத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

போர் சூழல் முடிவடைந்து நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கில் உள்ள இளைஞர் ,யுவதிகளை இராணுவ சேவையில் இணைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து சமுகத்தினரும் நாட்டிற்காக சேவையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இராணுவத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை இணைப்பது குறித்து மக்களிடையே தவறான அபிப்பிராயம் உண்டு. இருப்பினும் இவ்வாறான தவறான கருத்துக்கள் காணப்படுகின்ற நிலையிலும் இதுவரை கிளிநொச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் இராணுவத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் நன்றாகவே உள்ளனர். அதுபோல யாழ்ப்பாணத்திலும் இளைஞர் யுவதிகளையும் எதிர்காலத்தில் இராணுவத்தில் இணைக்க உள்ளோம். இவ்வாறு இணைப்பதன் மூலம் அவர்களது குடும்பத்தினரும் பொருளாதார ரீதியில் நன்மை அடைவர் என்றார்.

Related Posts