யாழ்.மாநகர சபை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆணையாளருக்கான அலுவலகத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மேற்படி அலுவலகம் நேற்றய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபை வளாகத்தில் மக்களுக்கான சேவைகளை இலகுபடுத்தும் அதேவேளை, உத்தியோகத்தர்களை ஒருமுகப்படுத்தும் வகையில் மேற்படி கட்டிடத்தொகுதி புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதில் பொதுசன தொடர்பாடல், ஸ்தாபன, செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக புதிய செயலகம் இயங்கவுள்ளது.
முன்பதாக பெயர்ப்பலகையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சகிதம் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி திரைநீக்கம் செய்து வைத்ததுடன் புதிய கட்டிடத்தையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து புதிய அலுவலகத்தை அதிதிகள் பார்வையிட்ட அதேவேளை, யாழ்.மாநகர சபையின் ஏனைய செயலகங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு அவற்றின் தொழிற்துறை நடவடிக்கைகள் தொடர்பிலும் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டனர்.
இதன்போது யாழ்.மாநகர முதல்வர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா, மாநகர ஆணையாளர் பிரணவநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.