கிராம அபிவிருத்திற்கு ஒத்துழைக்கவேண்டும் – டக்ளஸ்

அரசாங்கத்தினால் கிராம அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதிகளினை கிராமஅலுவலர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

GS-meeting-1

யாழில் புதிதாக நியமனம் பெற்ற கிராம அலுவலர்களுக்கும் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்றது.

இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘அரச கொள்கைகளுக்கு ஏற்ப கிராம அலுவலர்கள் தங்கள் பணிகளைத் தொடரவேண்டும். கிராம அலுவலர்கள் கிராம அபிவிருத்தியில் கூடிய கவனம் செலுத்தி அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் கேட்டுக்கொண்டார்.

GS-meeting-2

இந்நிகழ்வில் யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களிலும் புதிதாக நியமனம் பெற்ற 129 கிராம அலுவலர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts