ஐ.சி.சி 20- 20 உலக கிண்ண போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறவேண்டும் என வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கைரேகை பதிவுசெய்யும் நடவடிக்கை நடைபெறுகிறது.
மொபிடெல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை முதல் யாழ்ப்பாணத்தில் கைரேகை பதிவுசெய்யும் நடவடிக்கை நடைபெறுகிறது.
இந்த நிகழ்வு பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெருமளவான மக்கள் இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவித்து தமது கைரேகைகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
ஐ.சி.சி 20- 20 உலக கிண்ண போட்டி இம் மாதம் 16 ஆம் திகதி வங்கதேசத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது