இம்முறை நடைபெறும் 25 ஆவது ஜெனிவா மனித உரிமை அமர்வில் அமெரிக்கா முன்வைத்துள்ள யோசனையில் உள்நாட்டு விசாரணையை வலியுறுத்துவது சம்பந்தமாக மீண்டும் கூறப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைபைப் பலப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் அங்கத்துவ நாடுகளால் முடியும். அதற்கான சாத்தியப்பாடுகளை வெளியிலிருந்து அங்கத்துவ நாடுகளிடம் கோரவும் முடியும்.
ஆனால் இலங்கையானது தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனையினை தோல்வியுறச் செய்வதற்கான முயற்சிகளில் தமக்கு ஆதரவினைத் தேடிக்கொள்ளும். என்னதான் இருப்பினும் இலங்கை என்ற இந்த சிறுநாட்டிற்குள் பெரும்பான்மை இனத்தவருக்கும் சிறுபான்மை இனத்தவருக்குமான நிரந்தர மனிதாபிமானமுள்ள தீர்வானது இன்னமும் மிகப்பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகின்றது என ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம்.