தாங்கள் விடுதலைப்புலிகள் எனவும்,மீண்டும் புலிகள் அமைப்பினை உருவாக்க அதிக பணம் தேவையாக உள்ளதாகவும் தெரிவித்து வைத்தியர் ஒருவரிடம் பணம் மற்றும் நகைகளை கைப்பற்ற முனைந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த தகவலை வெளியிட்டார் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண.
இது தொடர்பில் இவர் மேலும் தெரிவிக்கையில்..
கைதான நபர் மூவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும்,இவர்கள் வெள்ளவத்தையில் உள்ள வைத்தியரிடம் தாம் புலிகள் எனவும் தமது அமைப்பினை மீள்உருவாக்கம் செய்ய அதிக பணம் தேவை எனவும் தொலைபேசி மூலம் கப்பம் பெற முயன்றுள்ளனர்.
இதேவேளை இவர்கள் குறித்த வைத்தியரிடம் ரூபா10 இலட்சம் பணம்,மற்றும் 3பவுண் தங்க நகையினையும் கப்பமாக கேட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறித்த வைத்திய அதிகரியினால் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்தே இவர்களை இரகசியமான திட்டமிடலுக்கு ஊடக மடக்கி பிடிக்கப்பட்டனர்.
கைதான நபர்களில் ஒருவரின் வீட்டில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை மூலம் கையடக்கதொலைபேசி மற்றும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய வீடியோ காட்சி பதிவுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பில் இதற்கு முன்னர் வேறு யாரிடமாவது கப்பம் பெற்றுள்ளார்களா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரனைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகபேச்சாளர் மேலும் தெரிவித்தார்.