பளையை வந்தடைந்தது யாழ்தேவி

trainகிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி கடுகதி ரயில் சற்று நேரத்திற்கு முன்னர் பளை ரயில் நிலையத்தைச் வந்தடைந்துள்ளது.

வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின்போது சேதமடைந்த ரயில் பாதை புதிதாக அமைக்கப்பட்டதை குறிக்கும் முகமாக கிளிநொச்சியிலிருந்து பளைவரை ரயில் பயணம் இடம்பெற்றுள்ளது.

இந்திய இர்கொன் நிறுவனத்தினால் கிளிநொச்சியில் இருந்து பளை வரையான 21 கிலோ மீற்றர் தூர ரயில்பாதை மீளமைக்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, பிரதியமைச்சர் ரோஹன திஸாநாயக்க, இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சின்ஹ ஆகியோர் இதற்கான நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts