உணவகங்களிலும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும்

prize-listயாழ். குடாநாட்டில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் மாவட்ட இணைப்பதிகாரி த.வசந்தசேகரன் அறிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட இணைப்பதிகாரி மேலும் தெரிவிக்கையில்,

உணவகங்கள் உள்ளிட்ட வியாபார நிலையங்கள் அனைத்திற்கும் ஏற்கனவே விலைப்பட்டியல் காட்சிப்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த அறிவித்தலை உணவக உரிமையாளர்களோ அல்லது வியாபார நிலையங்களின் உரிமையாளர்களோ பின்பற்றுவதாக தெரியவில்லை.

எனவே இதுவரை விலைப்பட்டியலைகாட்சிப்படுத்தாதவர்கள் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் காட்சிப்படுத்த வேண்டும்.

அதன்படி குறித்த திகதிக்குப் பின்னர் தீடீர் சோதனை நடவடிக்கைகள் பாரிய அளவில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் வியாபார நிலையங்கள் அனைத்திலும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்த வேண்டியது வியாபார நிலைய உரிமையாளர்களது கடமையாகும்.

அவற்றிலும் புடைவைக்கடைகளில் விலையினையே காட்சிப்படுத்த வேண்டுமே ஒழிய குறியீட்டு எண்களை காட்சிப்படுத்தக் கூடாது அவ்வாறு காட்சிப்படுத்தும் போது அது குறித்த வியாபார நிலையத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும்.

எனவே நுகர்வோரின் நலனைக் கருத்திற் கொண்டு விலைப்பட்டியலை சரியான முறையில் காட்சிப்படுத்த வேண்டும். மீறுவோருக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts