எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் தொடர்பான கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தினை ஆதரித்து, எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், வலி. வடக்கின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும், காணாமற் போனோர்கள் மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களை விடுவிக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்படவுள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சியினர், இடம்பெயர்ந்த மக்கள், காணாமல் போனோரின் உறவினர்கள், மனித உரிமைகள் சார்ந்த அமைப்புக்கள் உள்ளிட்ட பல அமைப்புக்கள் கலந்துகொள்ளவுள்ளன.
அத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் நாடளாவிய ரீதியிலும் பல இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மேலும் தெரிவித்தது.