வலிகாமம் வடக்கு மாவை கலட்டி பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களில் நிரந்தர காணிகள் இல்லாத மக்களுடன் கலந்துரையாடினார்.
தெல்லிப்பழை மாவைகலட்டிப்பகுதிக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் அங்கு கூடி நின்ற மக்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது மாவைகலட்டி, மயிலிட்டி, வலிவடக்கு உள்ளிட்ட யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமக்கு நிரந்தர காணிகள் இல்லாத நிலையில் தாம் எதிர்நோக்கிவரும் இடர்பாடுகள் தொடர்பில் அமைச்சர் அவர்களுக்கு எடுத்து விளக்கினர்.
மக்களது கோரிக்கையினை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் அவர்கள் கோரிக்கை தொடர்பான குடும்பங்களின் எண்ணிக்கை, அங்கத்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விபரங்களை கேட்டுக் கொண்டார்.
இதனிடையே மாவைகலட்டி பகுதியிலுள்ள அரச காணிகள் தொடர்பான விபரங்களை தமக்கு சமர்ப்பிக்குமாறும் பிரதேச செயலக அதிகாரிகளிடம் பணிப்புரை வழங்கினார்.
இதன்போது சண்டிலிப்பாய் பிரதேச செயலரும், தெல்லிப்பளை பதில் பிரதேச செயலருமான முரளிதரன், தெல்லிப்பழை உதவிதிட்டமிடல் பணிப்பாளர் சிவகுமார், அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன், வலிமேற்கு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்), ஈ.பி.டி.பியின் சுன்னாகம் இணைப்பாளர் அன்பு ஆகியோர் உடனிருந்தனர்.