எதிர்வரும் மே மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டுக்கான விண்ணப்பங்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கோரப்பட்டுள்ளன. உள்நாடு மற்றும் வெளிநாடு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 1,000 இளைஞர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார் என எதிர்பார்ப்பதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சர்வதேச இளைஞர் மாநாடு எதிர்வரும் மே 06ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்கு நாட்டிலுள்ள இளைஞர்களிடமிருந்து தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் விண்ணப்பங்களை கோரியுள்ளன.
18 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட இளைஞர் செயற்பாட்டாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பெப்ரவரி 21ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான மேலதிக தகவல்களை www.wcy2014.com என்ற இணையத்தளத்தில் பெற முடியும்.
இதேவேளை, சர்வதேச இளைஞர் மாநாட்டுக்கான இலச்சினை வெளியிடும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இட்பெற்றது.
இந்த ஊடக துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.