வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 09 பாடசாலைகளுக்கு கடந்த 23ஆம் 24ஆம் திகதிகளில் புதிய அதிபர்கள் நியமிக்கப்பட்டதாக வலிகாமம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் செல்வரட்ணம் சந்திரராசா தெரிவித்தார்.
வலிகாமம் கல்வி வலயத்தின் கீழ் தெல்லிப்பழை, சண்டிலிப்பாய், உடுவில், சங்கானை ஆகிய 04 கல்விக் கோட்டங்கள் உள்ளன.
தெல்லிப்பழை கல்விக் கோட்டத்தின் கீழுள்ள தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக்கு மங்களம் மணிசேகரனும் கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயத்திற்கு தர்மபுத்திரன் தயானந்தனும் அளவெட்டி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு வி.அருமைநாதனும் அளவெட்டி தெற்கு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு கந்தையான சிவபாலனும் நியமிக்கப்பட்டனர்.
சண்டிலிப்பாய் கல்விக் கோட்டத்தின் கீழுள்ள மாதகல் சென்.ஜோசப் மகா வித்தியாலயத்திற்கு ஜோசேப் எட்வேட் பங்கீராசு நியமிக்கப்பட்டார்.
உடுவில் கல்விக் கோட்டத்தின் கீழுள்ள தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு நா.தனபாலசிங்கமும் உடுவில் மான்ஸ் தமிழ் கலவன் பாடசாலைக்கு இரா.ஜெயக்குமாரும் சுன்னாகம் மயிலணி சைவ மகா வித்தியாலயத்திற்கு ரிஷக் தனஞ்செயனும் நியமிக்கப்பட்டனர்.
சங்கானைக் கல்விக் கோட்டத்தின் கீழுள்ள அராலி முருகமூர்த்தி வித்தியாலயத்திற்கு கு.முருகானந்தன் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.