கல்லுண்டாய் வெளியில் கொட்டப்படும் கழிவுகளால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் – அமைச்சர் சத்தியலிங்கம்

saththiya-lingamகல்லுண்டாய் வெளியில் கொட்டப்படும் கழிவுகளால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

மானிப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட கல்லுண்டாய் வெளியில் யாழ் நகரக்கழிவுகள் கொட்டப்பட்டு குப்பைகள் கண்ணுக்கெட்டியதூரம் வரை மலைபோன்று காட்சியளிக்கின்றது.

இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயமுள்ளதாக பிரதேச மக்கள் முறையிட்டதை தொடர்ந்து வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், மானிப்பாய் பிரதேச சபையின் உப தவிசாளர் மற்றும் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

இதன் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இவ் விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சில் நேற்று கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இதன்போது கட்டுப்பாடின்றி கொட்டப்படும் திண்மக்கழிவுகளால் சூழலுக்கு ஏற்படப்போகும் அபாயம் குறித்தும் இவ்வாறான நிலைமைக்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன் படி மாநகர சபை கழிவுகளை சேகரிக்கும்போது உக்கல் அடையக்கூடியவை தனியாகவும், பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற எளிதில் உக்கலடையாதவை தனித்தனியாகவும் சேகரிக்கப்படுதல் வேண்டும் என்றும் அவற்றை மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய வகையில் தொழிநுட்பங்களை பயன்படுத்தவேண்டும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

அத்துடன் கழிவுப்பொருட்களிலிருந்து அசேதன உரம் தயாரிக்க முடியுமெனவும் இதன் மூலம் விவசாயிகளை ஊக்குவித்து சேதன உரப்பாவனையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக” வடமாகாண விவசாய அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எனினும் இதற்கான உத்தரவாதத்தை யாழ் மாநகர சபை மேற்கொண்டால் மட்டுமே மானிப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட கல்லுண்டாய் வெளியில் தொடர்ந்தும் குப்பைகள் கொட்டுவதற்கு அனுமதி வழங்கமுடியுமென மானிப்பாய் பிரதேச சபையின் உபதவிசாளர் தெரிவித்தார்.

எவ்வாறான நிலை காணப்பட்டபோதிலும் தொற்று நோய் ஏற்படாத வகையில் இச் சூழலை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுகக்ப்படவேண்டியுள்ளதால் வட மாகாண சுகாதார அமைச்சு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

Related Posts