Ad Widget

செல்வி தங்கம்மா அப்பாகுட்டி அவர்களின் ஜனனதினம்

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 89 ஆவது பிறந்ததின அறக்கொடை விழாவில் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி அறக்கொடையாக வழங்கப்பட்டது.

thankama-appakkuddi

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த சுத்திகரிப்புப் பிரிவிற்கு ஒரு இலட்சம் ரூபாவும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் சிறுவர் விடுதிக்கு 50 ஆயிரம் ரூபாவும் சிவத்தமிழ்ச் செல்வி கல்வி நிதியத்தின் மூலம் மாணவர் ஒருவருக்கு தலா 2000 ரூபா வீதம் 100 மாணவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாவும் அறக்கொடைகளாக வழங்கப்பட்டன.

தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாநிதி குமாரசுவாமி சோமசுந்தரம், யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் செ.கிருஷ்ணராசா, வைத்தியநிபுணர் த.பேரானந்தராஜா, யாழ்.வலயக் கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, வைத்தியகலாநிதி கந்தையா மாணிக்கம், தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய நிர்வாக சபை உறுப்பினர் நாகலிங்கம் தவமணிநாயகம், மூத்த இசைக்கலைஞர் கலாபூஷணம் சுப்பையா கணபதிப்பிள்ளை, மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான திருமதி அன்னலட்சுமி இராஐதுரை, மட்டுவில் இளைப்பாறிய அதிபரும் சமயம் தமிழ் இலக்கிய எழுத்தாளருமான நாகமுத்து நல்லதம்பி ஆகியோருக்கு சிவத்தமிழ் விருதுகள் வழங்கப்பட்டன.

தெல்லிப்பளையில் இந்து பல்கலைக்கழகம் அமைக்கப்படவேண்டும்

நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம் தனது உரையில்.

சமய பண்பாடுகள் நிறைந்த தெல்லிப்பளையில் இந்து பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
கட்டுப்பாடுகள் நிறைந்த யாழ்ப்பாண சமூகத்தில் பிறந்த சிவத்தமிழ் செல்வி ஒரு பெண்ணாக இருந்து ஒழுக்கம் மற்றும் சமூக கடமை உணர்வோடு தானும் வாழ்ந்து தனது மகளிர் இல்லத்தில் வாழும் பிள்ளைகளையும் ஒழுக்கத்துடன் வளர்த்தார்.

சிவத்தமிழ் செல்வி அவர்கள் ஆன்மீகத்தை வாய்ப்பேச்சாக மட்டுமன்றி வாழ்ந்தும் காட்டியவர். சமயம் வேறு சமூகம் வேறு என்பதல்ல இரண்டுமே ஒன்றுதான் என வாழ்ந்து காட்டியவர் என்று குறிப்பிட்டார்.

Related Posts