யாழ். மாநகர சபையின் ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவோம் – டக்ளஸ்

daklas-dak-epdp‘யாழ். மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தினை மீண்டும் நாங்கள் கைப்பற்றுவோம்’ என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ‘யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்யக்கூடியவற்றினை செய்வோம். அத்துடன், பொதுமக்களின் ஆலோசனைகளையும் எதிர்பார்த்திருக்கின்றோம்’ என்றார்.

‘நாங்கள் தேர்தலுக்காக எதையும் செய்பவர்கள் அல்ல. மக்களின் தேவைகளை கருத்திற்கொண்டு செய்கின்றோம். இந்த தடவை செய்ய முடியாமல் போனவற்றினை எதிர்காலத்தில் செய்யத் தீர்மானித்திருக்கின்றோம்.

‘நம்பிக்கைதான் வாழ்க்கை’ என்ற கூற்றுக்கு இணங்க 2015ஆம் ஆண்டும் யாழ். மாநகர சபையின் ஆட்சிப் பீடத்தினை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும்’ அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts