யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர் ஊழியர்கள் இன்று ஆறாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் நோயாளிகள் எதிர்நோக்கும் சிரமங்களையும் கருத்தில் கொண்டும் நிறைவு காண் மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஸ்ரீலங்கா ஜனராஜ சௌக்கிய சுகாதார சங்கத்தின் யாழ். கிளையின் சிற்றூழியர்களும் இணைந்து ஒரு மணிநேர கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி கடந்த வெள்ளிக்கிழமை முதல் பணிப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரையான ஒரு மணிநேர அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தினை குறித்த உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்களும் முன்னெடுத்துள்ளனர்.
இப்போராட்டத்தில் மருந்துவர்களும் தாதியர்களும் இணைந்து தற்காலிக தொண்டர் ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரியவருகின்றது.