Ad Widget

தொலைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் செல்வோருக்கெதிராக கடுமையான நடவடிக்கை

Phoneமோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமலும், கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டும் ஒரு கைப் பிடியை மட்டும் பிடித்துக் கொண்டும் செல்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி. ரத்னாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாடசாலை பேருந்துகளில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ் செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பும் முறையொன்றையும் புதிதாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வரவு – செலவு திட்டத்தில் போக்குவரத்து அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதம் நேற்றுப் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கையின் போக்குவரத்துச் சேவையை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு பல்வேறு விசேட நடவடிக்கைகளை போக்குவரத்து அமைச்சும் எமது அமைச்சும் இணைந்து மேற்கொண்டு வருகிறது. பேருந்தில் பணியாற்றும் சாரதிகளும், நடத்துனர்களும் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும். இதற்கமைய ஜி.டி.எஸ். சீ.சீ.ரி.வி. கமரா ஆகியவற்றை பொருத்தி சாரதிகளினதும் நடத்துனர்களினதும் நடவடிக்கைகளை அவதானிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியும். விசேடமாக மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துபவர்கள் குறித்தும் நாம் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும். மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்களில் அனேகமானோர் தலைக்கவசம் அணிவதில்லை. போக்குவரத்து பொலிஸாரைக் கண்டவுடன் மாத்திரமே அதனை அணிகின்றனர் என அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்தார். –

Related Posts