குரும்பசிட்டி கிராமத்திற்கான மின் இணைப்பினை ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வடக்கின் வசந்தம் திட்டத்தினூடாக 17 இலட்சத்து 730 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மேற்படி பிரதேசத்திற்கான மின்இணைப்பினை நேற்றயதிகம் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் (உதயன்) அவர்கள் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் உதயன் எமது தமிழ் மக்கள் படிப்படியாக அனைத்துப் பிரதேசங்களிலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வீட்டுத்திட்டம், மின்சாரவசதி, போக்குவரத்து வசதி போன்ற அடிப்படைப்பிரச்சினைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இவ்வாறாக மக்களின் வாழ்வாதார தேவைகள் மற்றும் எமது அரசியல் உரிமை என்பவற்றை பெறுவதற்காகவே நாம் அரசுடன் இணைந்து செயற்படுவதாகவும், சில அரசியல்வாதிகள் மக்களின் வலிகள், அவர்களின் துன்பதுயரங்ளை கிளறி அவற்றினூடாக தங்களின் அரசியலினை மேற்கொண்டு வருகின்றனர் எனத்தெரிவித்தார்
மேலும் வழங்கப்பட்டுள்ள மின்சாரத்தினை பயன்படுத்தி ஆக்கபூர்வமான செயற்பாடுகளான மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் சுயதொழில் வளர்ச்சி போன்றவற்றை மேம்படுத்த வேண்டுமெனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து குரும்பசிட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் மின்வழங்கலினை தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் உதயன் அவர்கள் 26 வருடமாக மூடப்பட்டிருந்த குப்பிளான் குரும்பசிட்டி பிரதான வீதியினை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறிமோகன், தெல்லிப்பளை திட்டமிடல் பணிப்பாளர், வடக்கின் வசந்தம் உத்தியோகத்தர்கள், ஈ.பி.டி.பியின் வலிவடக்கு இணைப்பாளர் அன்பு, ஈ.பி.டி.பியின் சுன்னாகம் உதவி இணைப்பாளர் வலன்டயன், பிரதேச உறுப்பினர் ஹரிகரன், உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.