வடக்கு கிழக்கில் சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழியில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கில் சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழி அறிந்த அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் எந்த பொலிஸ் நிலையத்திலும் தமிழில் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியாதுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தமை தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.