வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடைவளர்ப்பு, நீர்ப்பாசனம், மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெறும் பொருட்டு சிந்தனைக்குழாம் ஒன்றையும் ஆலோசனைச்சபை ஒன்றையும் அமைக்க இருப்பதாக வடக்குமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ஊடகக்குறிப்பில்,
விவசாயம், கமநலசேவைகள், கால்நடைவளர்ப்பு, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகிய துறைகளை நவீனமுறையில் மேம்படுத்தி இத்துறைகளில் வடமாகாணத்தைத் தன்னிறைவு அடையச்செய்வதற்கு அறிஞர்களின் பங்களிப்பு அவசியமாகும்.
அந்தவகையில் எமது அமைச்சுக்குத் தேவையான நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெறும் பொருட்டுத் தாயகம், தமிழகம், மற்றும் புகலிட நாடுகளில் வாழும் துறைசார் அறிஞர்களை உள்ளடக்கிய சிந்தனைக்குழாம் (THINK TANK) ஒன்றை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக் குழாமில் இடம்பெறுபவர்கள் இணையவழித் தொடர்பாடலின் ஊடாகத் தமது ஆலோசனைகளை எமக்கு வழங்க முடியும்.
அத்தோடு நாம் காலத்துக்குக் காலம் நேரில் கூடிக்கலந்தாலோசிக்கும் நோக்கில் ஆலோசனைச்சபை (ADVISORY BOARD) ஒன்றையும் அமைக்க உள்ளோம்.
மேற்படி சிந்தனைக்குழாமிலும் ஆலோசனைச்சபையிலும் இடம்பெற்று தமது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்க விரும்பும் பற்றாளர்கள் அனைவரையும் npminiagri@gmail.com என்னும் மின்னஞ்சலில் அல்லது minister@agrimini.np.gov.lk என்னும் மின்னஞ்சலில் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
CALL FOR SPECIALIST PARTICIPATION FOR THE DEVELOPMENT OF AGRICULTURE AND ALLIED FIELDS IN THE NORTHERN PROVINCE
Northern Provincial Minister Mr. P. Ayngaranesan stated that a Think Tank and an Advisory Body are to be formed for advice, guidance and direction for the development of Agriculture, Agrarian Services, Animal Husbandry, Irrigation and Environment in the North.
To fall in line with modern trends and target self sufficiency, participation for subject-matter-specialist in the related areas is indispensible. Hence a network of those within us in Sri Lanka, from Tamil Nadu and our expatriate community is sought with a view of forming a Think Tank. They could communicate and provide advice via the internet.
In addition an Advisory Board shall be formed loop relevant expertise for periodic meetings, review and advice in person. Those well wishers who desire to participate in the Think Tank and or the Advisory Board may contact us at; minister@agrimini.np.gov.lk