கடத்தப்பட்டு காணாமற்போனதாக கூறப்படும் லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கு விசாரணையினை எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதிக்கு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் ஒத்திவைத்தார்.
மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவரான லலித் குமார் மற்றும் அவரது நண்பரான குகன் முருகன் ஆகியோர் கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
மேற்படி வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தினால் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பத்திரிகையாளர் சந்திப்பின்போது லலித் மற்றும் குகன் இருவரும் அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருந்ததாக வெளியிடப்பட்ட செய்தியினை சிரச தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த செய்தி அறிக்கையினைப் பார்வையிட்ட நீதிபதி மேற்படி வழக்கினை 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.