Ad Widget

பாராளுமன்றில் மகிந்தா முன்னாடி முரளிக்கு சாரா செருப்படி

நாட்டில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விமான நிலையங்கள் அமைப்பு, துறைமுகங்கள் விரிவாக்கம்,வீதி அபிவிருத்தி, சுற்றுலா விடுதிகள் அமைப்பு என எவையும் போரினால் சிதைக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

saravanapawan-saraa

2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த 21ஆம் திகதி நாளுமன்றில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டது. அது தொடர்பிலான விவாத உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போரினால் பெரும்பாதிப்புக்களை சந்தித்த வடக்கு மக்கள் அதன் பின்பும் கூடப் பெரும் அழிவுகளையும் இடர்களையும் சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில் 2014 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தொடர்பாக மக்கள் சில எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனனர்.

ஆனால் இந்த வரவு செலவுத்திட்டத்தினால் எமது மக்களுக்குக் கிடைத்தது மிகப்பெரும் ஏமாற்றமே என்பதை நாம் இங்கு சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.

இந்த வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி அவர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு 7.3 வீத அபிவிருத்தியே இடம் பெற்ற வேளையில் வடக்குக் கிழக்கில் 22 வீத அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் விமான நிலையங்கள் அமைக்கப்படுவதும், துறைமுகங்கள் விரிவாக்கப்படுவதும், பெருந்தெருக்கள் அகலிக்கப்படுவதும், சுற்றுலா விடுதிகள் அமைக்கப்படுவதும் போரினால் சிதைக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எவ்வகையில் உதவமுடியும் என்பதை நான் இங்கு கேட்டு வைக்க விரும்புகின்றேன்.

இருப்பினும் நாட்டில் இத்தகைய அபிவிருத்திகளை நாம் வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனாலும் எதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே அவசியமானது.

இங்கு கவர்ச்சிகரமான புள்ளி விவரங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஆனால் சிதைந்து போன எமது மக்களின் வாழ்வைக் கட்டியெழுப்பவும், மீண்டும் எமது மக்கள் ஏனையவர்களைப் போல் ஒரு இயல்பு வாழ்வை அனுபவிக்கவும், எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை என்பதை இங்கு நான் மனவருத்தத்துடன் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் மேலதிக உரை காணொளி வடிவில்……

(2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவத்திட்டம்நடாளுமன;றில் கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டது. அதற்கான விவாத உரையில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் உரையாற்றிய போது..)

Related Posts