Ad Widget

வரவு செலவுத்திட்டம் 2014…

இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 68 ஆவது வரவு-செலவுத்திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தனது 68 ஆவது வயதில் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் சமர்ப்பித்தார்.

mahintha

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 68 ஆவது பிறந்த நாளை கடந்த 18 ஆம் திகதி கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

ரூ.516.1 பில்லியன் பற்றாக்குறை

2014 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் 516.1 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுகான மானியங்கள் அடங்கலாக மொத்த வருமானம் 1469.5 பில்லியன் ரூபாவாகும். மொத்த செலவு 1985.6 பில்லியன் ரூபாவாகும்.

அரசாங்கத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான பற்றாக்குறை 507.5 ரூபாவாகும். 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அடுத்த ஆண்டுகான பற்றாக்குறை 8.7 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.

வறுமை 6 வீதமாக குறைப்பு

வறுமை 2013 ஆம் ஆண்டில் 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது மற்றும் 1976 ஆம் நடைபெற்ற அணிசேரா மாநாட்டிற்கு பின்னர் சர்வதேச மாநாடான பொதுநலவாய மாநாடு 2013 ஆண்டே நடைபெற்றது.

பொருளாதார வளர்ச்சி பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதுநலவாய மாநாட்டை நடத்தியதன் ஊடாக நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருமான ரூ. 7000 மில்லியன் எதிர்பார்ப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருமான 7000 மில்லியன் ரூபாவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. துணி இறக்குமதியை 6 வீதத்தால் அதிகரிக்க யோசனை மற்றும் கட்டுமான கைத்தொழில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக தற்போது உள்ளது.

வெளிநாட்டவர்கள் காணி கொள்வனவு செய்வதை நிறுத்த சட்டம்

வெளிநாட்டவர்கள் காணி கொள்வனவு செய்வதை முற்று முழுதாக நிறுத்த சட்டம் கொண்டுவரப்படும் என்பதுடன் வங்கிகளை நாங்கள் தனியார் மயப்படுத்தமாட்டோம்.குத்தகை அடிப்படையில் மட்டுமே வெளிநாட்டவர்கள் காணிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

தனியார் மயப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்டது

தனியார் மயப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்டு அதனூடாக அந்த நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்கப்பட்டு அந்த வருமானம் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.அத்துடன் அரசாங்க தொழிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பற்றாக்குறை 2016 ஆம் ஆண்டளவில் 3.6 வீதமாக குறைக்கப்படும்

வரவு-செலவுத்திட்ட பற்றாக்குறை 2016 ஆம் ஆண்டளவில் 3.6 வீதமாக குறைக்கப்படும். அத்துடன் அரச கடன் கொடுத்தலும் குறைக்கப்படும்.

வாகனங்கள், மதுபானங்கள் மற்றும் சிகரெட் வரி ஊடாக வருமானம்

நிவாரணத்தை வழக்கும் அரசாங்கம் என்றவகையில் வாகனங்கள், மதுபானங்கள் மற்றம் சிகரெட் ஆகியவற்றின் மீதான வரிகள் ஊடாக வருமானத்தை ஈட்டவேண்டியுள்ளது. அத்துடன் தேசத்தை கட்டியெழுப்பும் வரி வங்கிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும்

வரியை இணையம் மூலமாக செலுத்தலாம்

மோட்டார் வாகன திணைக்களம் மற்றும் நில பதிவுமுறைகள் திறைச்சேரியின் கீழ் கொண்டுவரப்படும். இதனால் வரியை இணையம் மூலமாக செலுத்த முடியும்.

பசளைக்கு 350 ரூபா வழங்கப்படும்

பெரும்போகத்திலும் சிறுபாகத்திலும் பசளைக்கு 350 ரூபா வழங்கப்படும். நீர்பாசன முறைமாக்க 1700 மில்லியன் வழங்கப்படும்.விவசாயிகள் எதனையும் இலவசமாக கேட்கவில்லை அவர்கள் கேட்பதெல்லம் நீர்பாசனம் வீதி தொகுதிகள் மற்றும் காட்டு யானைகளிலிருந்து பாதுத்தல் ஆகியவையே


63 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம்

63 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த ஜனவரி முதல் ஓய்வூதியம் வழங்கப்படும் அதற்காக 1000 மில்லியன் மூலதனம் இடப்படும்.தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை ஆகியவற்றுக்கான வரி பலப்படுத்தப்படும்.

மிருக வைத்தியருக்கு 7500 ரூபா கொடுப்பனவு

பால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டள்ளது. அதனை மேம்படுத்துவதற்கு நாட்டுக்கு 20 ஆயிரம் பால் மாடுகள் இறக்குமதி செய்யப்படும். அத்துடன் மிருக வைத்தியருக்கு 7500 ரூபா கொடுப்பனவு

1000 பாலங்கள் நிர்மாணிக்கப்படும்

பின்தங்கிய கிராமங்களில் 1000 பாலங்கள் அடுத்தவருடம் நிர்மாணிக்கப்படும். கமநெகுமவை மேம்படுத்துவதற்கும் ஏனைய கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கும் 4500 ரூபா ஒதுக்கப்படும்.

பெண் சுயதொழிலாளர்களுக்கு வரி விலக்கு

பெண் சுயதொழிலாளர்கள் கடன் பெறுவதற்காக வரி விலக்கு அளிக்கப்படும். கடனை 250,000 பெற்றுக்கொள்ளப்படும். 68 வயதானவர்களும் அதற்கு குறைந்தவர்களும் இந்த கடனை பெற்றுகொள்ள முடியும்.

மாகாண சபை வரி இல்லை

50 ஆயிரம் ரூபாவிற்கும் குறைந்த வணிகங்களுக்கு மாகாண சபை வரி இல்லை.

சிறுவர், பெண்கள் பாதுகாப்பு பணியகத்திற்கு ரூ.300 மில்லியன்

சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியகத்திற்கு 300 மில்லியன் ரூபா கொடுக்கப்படும். இலங்கையில் ஒரு செழுமையான சமய கலாச்சார வளர்ப்பு முறை உள்ளபோதும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் பரவலாக காணப்படுகின்றது. இது நிறுத்தப்படவேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ்., காலி வைத்தியசாலைகளில் வேதிச்சிகிச்சை அலகுகள்

யாழ்ப்பாணம், காலி மற்றும் வேறு மாவட்ட வைத்தியசாலைகளில் வேதிச்சிகிச்சை அலகுகள் நிறுப்படும். இதன் மூலம் மஹரகம புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக காத்திருக்கும் காலம் 3 வருடங்களிலிருந்து 6 மாதமாக குறைக்கப்படும்.


விரிவுரையாளர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்படும்

பல்கலைக்கழகங்களில் தற்போதுள்ள விடுதிவசதிகளை நவீனப்படுத்தவும் விரிவுபடுத்தவும் திட்டம். விரிவுரையாளர்களுக்கான கல்விபடி 5 சதவீதமும் விரிவுரையாளர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்படும். நவீன பல்கலைக்கழக நகரங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விமானி பயிற்சி பாடசாலை

நவீனப்படுத்தப்பட்ட விமானிகளுக்கான பயிற்சி பாடசாலை நிர்மாணிக்கப்படும்.


5000 வீடுகளை கொண்ட 15 புதிய வீட்டுத்திட்டங்கள்

ஒவ்வொன்றும் 5000 வீடுகளை கொண்ட 15 புதிய வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். இந்த வீடுகளை ஒதுக்கும் போது தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்வோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நீதிபதிகளின் படிகள் அதிகரிப்பு

நீதிபதிகளின் பிரதியேக படிகள் 8 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச்செலவு படி 1200 ரூபாவால் அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச்செலவு படி ஜனவரியிலிருந்து 1200 ரூபாவால் அதிகரிக்கப்படும்.

ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு

2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு 500 ரூபாவும் அதற்கு பின்னர் ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு 350 ரூபாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Posts