இம்முறை பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி நாளை (08) வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2012 – 2013ம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளி தயாரிக்கும் நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் க்செனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்தார்.
2012ம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 24 ஆயிரம் பேர் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவர் என அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களிடம் இருந்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதென அவர் கூறினார்.
இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி இம்முறை மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், முதல் கட்டம் நவம்பர் 25ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
முதல் கட்டத்தில் 8000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.