இந்திய துணை தூதரக ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கௌரவிக்கப்பட்டார்.
இன்றைய தினம் (6) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்திய துணை தூதுவர் மகாலிங்கம் அவர்கள் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
துணை தூதரக தூதுவரின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில்
வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் கமலேந்திரன் அவர்கள் இந்திய துணை தூதுவர் மகாலிங்கம் அவர்களுக்கு வடக்கு மாகாணங்களின் தற்போதைய நிலவரம் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலின் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாணசபை முறைமையை ஏற்படுத்தியமை, இந்திய வீட்டுத்திட்டம், வாழ்வாதார உதவிகள், ரயில் பாதைபுனரமைப்பு, உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு இந்திய காட்டி வரும் கரிசனைக்கு மக்கள் சார்பாகவும், எமது கட்சி சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் இந்திய அரசாங்கம் எமது தமிழ் பேசும் மக்களுக்கு மென்மேலும் வாழ்வதார உதவிகள், இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகளை அமைத்தல், பிரதேச உள்ளக வீதிகள், கடற்றொழிலாளர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களும் மேலும் உதவ வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது வலியுறுத்திக் கூறினார். சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில்
மேலும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் எமது நாட்டில் நடைபெறப் போகும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுமென்பதுடன், அவர் வடக்கிற்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு நிலமைகளை பார்வையிட வேண்டும். தமிழ் பேசும் மக்களின் தீர்வுப் பிரச்சினை தொடர்பில் இந்திய தீவிர அக்கறை காட்ட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.