வலி.வடக்கு வீடழிப்பு விவகாரம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு அதனை நிறுத்துமாறு அவர் உத்தரவிட்ட பின்னரும் அது தொடர்கிறது.
இதனால் நாம் வேறு வழியைத் தான் பார்க்க வேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலி.வடக்கில் வீடழிப்பை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தொலைபேசி மூலம் கோரியிருந்தார்.
இதற்கமைவாக வீடழிப்பை நிறுத்துமாறு ஜனாதிபதி யாழ். மாவட்ட இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார் என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க சம்பந்தனுக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
இதனையும் மீறி நேற்றும் வீடழிப்பு தொடர்ந்தது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, தொடர்ந்து வீடழிப்பு இடம்பெற்றால் தனக்கு உடனடியாக அறிவிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் என்னிடம் தெரிவித்தார்.
இதனடிப்படையில் இன்றும் (நேற்றும்) வீடழிப்பு நடவடிக்கைகள் தொடர்வதைத் தெரியப்படுத்த அவருடன் பலமுறை தொடர்பு கொண்ட போதும் அழைப்புக் கிடைக்கவில்ல. நாங்கள் எமது மக்கள் சார்பாக ஜனாதிபதியுடன் வேண்டுகோளை விடுப்பது கடமை. ஜனாதிபதியின் உத்தரவையும் மீறி அது நடந்தால் என்ன செய்வது? நாங்கள் வேறு வழியைத்தான் பார்க்க வேண்டும். நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.
தொடர்புடைய செய்தி
வலி.வடக்கில் மஹிந்தவின் பணிப்பையும் மீறி நேற்றும் வீடுகள் இடித்தழிப்பு!