அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரிகளையும், வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளையும் சந்திப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன், காணமற் போனோர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுவில் மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான மனித உரிமைகள் சிரேஷ்ட சட்டத்தரணி கே.ரட்ணவேல் இருவரும் அமெரிக்காவுக்கு நேற்றுப் பயணமாகியுள்ளனர்.
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு திருமதி அனந்தி சசிதரன், அமெரிக்கா செல்வதற்கான ஒழுங்குகளை செய்துள்ளது.
இவருடன், இறுதிக் கட்டப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற் போனவர்கள் மனுக்களின் விசாரணைகளில் மனுதாரர் சார்பில் முன்னிலையாகிவரும், மனித உரிமை சட்டத்தரணியான கே.ரட்ணவேலும் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு செல்லும் மாகாணசபை உறுப்பினர திருமதி அனந்தி சசிதரன், வெளளை மாளிகை உயர் அதிகாரிகள், அமெரிக்க வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரிகள், செனட் சபை உறுப்பினர்கள், மற்றும் காங்கிரசின் முக்கிய உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை இந்தச் சந்திப்புக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் அமெரிக்கா பயணமாகியுள்ளனர்.