வடமாகாண சபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான அறிமுக செயலமர்வு இன்று யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்று வருகின்றது.
நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் உள்ளிட்ட ஆளும்கட்சி , எதிர்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது சிறந்த செயற்பாட்டுக்கான சபையின் வகிபாகம், மாகாண சபையுடன் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் சட்டப் பொறிமுறைகள் பற்றிய அறிமுகம், மாகாண சபையின் நிதிமுகாமைத்துவ முறைமை என்ற கருப்பொருளுடன் உறுப்பினர்களுக்கான தொழில் நுட்ப அமர்வும் நடைபெற்று வருகின்றது.