சாவகச்சேரி நகர சபையில் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான பிரேரணை நிறைவேற்றம்

tnaஅனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வட மாகாண முதலமைச்சர் பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தும் பிரேரணை சாவகச்சேரி நகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர சபை தலைவர் இ.தேவசகாயம் தலைமையில் விசேட கூட்டமொன்று செவ்வாய்கிழமை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நீண்ட காலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து இன அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுதலை செய்வது தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியுடன் கதைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

நகர சபை உறுப்பினர் அருணாச்சலம் பால மயூரனினால் முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணைக்கு நகர சபை உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கினர்.

Related Posts