5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கான வெட் டுப்புள்ளி விபரம் வருமாறு :
ஆகக் கூடிய வெட்டுப்புள்ளியாக 156 புள்ளிகளும் குறைந்த புள்ளியாக 151 புள்ளியும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 156.
மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 155.
அம்பாறை, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கான வெட் டுப்புள்ளி 154. கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மொனராகலை, முல்லைத்தீவு, இரத்தினபுரி, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி 153.
புத்தளம், திருகோணமலை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 152. அநுராதபுரம் மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளி 151 ஆகும்.
பாடசாலைகளுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.