சட்டம், ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் யாழ். விஜயம்

jaffna-visitபுதிதாக உருவாக்கப்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி இன்று வெளள்கிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளளர்.

இதன்போது யாழ். பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சின் செயலாளருக்கு விசேட பொலிஸ் அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி, யாழ். ஆயர் தோமஸ் சௌந்தர நாயகத்தை சந்தித்து ஆசிபெற்றதுடன் விசேட சந்திப்பையும் மேற்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி டி சில்வா, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இந்து கருணரட்ண ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts